
சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது
பல்லேவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பஹலகம பகுதியில் சட்டவிரோத மதுபானம் வைத்திருந்த நபரொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், நேற்று (02) மதியம் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
சோதனை நடவடிக்கையின் போது, சந்தேகநபரிடமிருந்து 67.5 லீற்றர் அளவிலான (90 போத்தல்கள்) சட்டவிரோத மதுபானம் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக பல்லேவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
CATEGORIES Sri Lanka

