
மாத்தறையில் உத்தரவை மீறி பயணித்த வாகனத்தின் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு
மாத்தறை, ஜனராஜா மாவத்தையில் உத்தரவை மீறிச் சென்றதாகக் கூறப்படும் காரொன்றின் மீது பொலிஸார் நேற்று (07) துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
குறித்த வாகனம் மாத்தறை வெல்லமடம பகுதியில் பொலிஸாரின் சைகையை மீறி பயணித்துள்ளது.
இந்நிலையில் பொலிஸார் காரை நோக்கி பல தடவைகள் துப்பாக்கிச் சூடு நடத்திய நிலையில், மாத்தறை, ஜனராஜா மாவத்தையில் கைவிடப்பட்ட நிலையில் கார் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தற்போது காரின் உரிமையாளர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
CATEGORIES Sri Lanka

