
4 மாவட்டங்களுக்குத் தொடர்ந்தும் மண்சரிவு எச்சரிக்கை
சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் நான்கு மாவட்டங்களுக்கு தொடர்ந்தும் மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதன்படி, கண்டி மாவட்டத்தின் கங்கா இஹல கோரல, தும்பனே, மெததும்பர, அக்குறணை, குண்டசாலை, உடுநுவர, தொலுவ, உடுதும்பர, பாதஹேவாஹெட்ட, ஹாரிஸ்பத்துவ, மினிபே, கங்கவட்ட கோரல, பஸ்பாகே கோரல, பன்வில, ஹதரலியத்த, யட்டிநுவர, பாததும்பர, தெல்தோட்டை, பூஜாப்பிட்டிய மற்றும் உடபலாத உள்ளிட்ட பிரதேச செயலகப் பிரிவுகள் அதிக ஆபத்துக்குள்ள பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
மேலும், கேகாலை மாவட்டத்தில் வரக்காபொல, அரநாயக்க, கலிகமுவ, ரம்புக்கனை, புளத்கொஹுபிட்டிய, யட்டியாந்தோட்டை, மாவனெல்லை மற்றும் கேகாலை பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு ஆபத்தான இடங்களில் வசிப்போருக்கு உடனடியாக வெளியேறுமாறு சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், குருநாகல் மாவட்டத்தின் ரிதிகம, நாரம்மல, பொல்கஹவெல, மல்லவபிட்டிய, அலவ்வ மற்றும் மாவத்தகம பிரதேச செயலகப் பிரிவுகளிலும் மண்சரிவு அபாயம் மிகுந்துள்ளதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இதனுடன், மாத்தளை மாவட்டத்தின் யடவத்த, மாத்தளை, அம்பன்கங்க கோரல, பல்லேபொல, லக்கல பல்லேகம, ரத்தோட்டை, நாவுல, உக்குவெல மற்றும் வில்கமுவ பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுவதற்கான சிவப்பு எச்சரிக்கை தொடர்ந்தும் அமலில் உள்ளது.
அதிகாரிகள், மழை தொடரும் சூழ்நிலையில் மக்கள் எச்சரிக்கையுடன் இருந்து, அதிகாரப்பூர்வ அறிவுறுத்தல்களைப் பின்பற்ற வேண்டுகிறார்கள்.

