மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற 2,447 டின் மீன்கள் அழிக்கப்பட்டன

மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற 2,447 டின் மீன்கள் அழிக்கப்பட்டன

நுகர்வோர் விவகார அதிகாரசபையால் அண்மையில் கொஸ்கம பகுதியில் நடத்தப்பட்ட விசேட சோதனையின் போது கைப்பற்றப்பட்ட தரமற்ற டின் மீன்கள் தொடர்பான வழக்கு (16) அவிசாவளை நீதவான் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட சம்பந்தப்பட்ட நபருக்கு, நீதிமன்றம் ரூ. 20,000/- அபராதம் விதித்து, வழக்குப் பொருளாக சமர்ப்பிக்கப்பட்ட 2,447 டின் மீன்களையும் அழிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி, நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைள, மேற்படி டின் மீன்கள் இன்று அவிசாவளை நீதிமன்ற வளாகத்தில் நீதிமன்றத்தின் மேற்பார்வையில் அழிக்கப்பட்டன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )