
வீதி விபத்தில் மூதாட்டி ஒருவர் பலி
யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பகுதியில் நேற்று (18) இடம்பெற்ற வீதி விபத்தில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மானிப்பாய் – இலவாலி வீதியில் சண்டிலிப்பாய் நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து, வீதியில் நடந்து சென்ற மூதாட்டி மீது மோதியதன் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் படுகாயமடைந்த மூதாட்டி சங்கானை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்பந்தப்பட்ட பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
CATEGORIES Sri Lanka

