
திருகோணமலை புத்தர் சிலை சம்பவம் ; 10 சந்தேக நபர்கள் விளக்கமறியல்
திருகோணமலை புத்தர் சிலை சம்பவம் தொடர்பில், கரையோரப் பாதுகாப்புச் சட்டத்தை மீறியமை மற்றும் சட்டவிரோத நிர்மாணங்கள் தொடர்பாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நான்கு பிக்குகள் உள்ளிட்ட 10 சந்தேக நபர்களை எதிர்வரும் 28ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பலங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட சந்தேக நபர்கள் இன்று (19) திருகோணமலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
CATEGORIES Sri Lanka

