
பஸ்ஸை முந்திச் சென்ற கார் மோட்டார் சைக்கிளில் மோதியதில் 3 வயது சிறுமி உயிரிழப்புகம்பளை – நாவலப்பிட்டி வீதியில் சம்பவம்
கம்பளை – நாவலப்பிட்டி வீதியின் நல்லகொல்ல பகுதியில்
பஸ் ஒன்றை முந்திச் செல்ல முயன்ற கார் ஒன்று, எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 3 வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.
நேற்று மதியம் அத்கல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
பஸ் ஒன்றை முந்திச் செல்ல முயன்ற கார் ஒன்று, எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியது , இதன்போது
மோட்டார் சைக்கிளில் பயணித்த ஓட்டுநர் மற்றும் இரண்டு சிறுவர்கள் காயமடைந்த நிலையில் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
எனினும், சிகிச்சைப் பெற்று வந்த மூன்று வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக காரின் ஓட்டுநரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அத்கல பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
CATEGORIES Sri Lanka

