மாமனாரின் கத்திக்குத்தில் மருமகன் உயிரிழப்புதெரணியகலையில் சம்பவம்

மாமனாரின் கத்திக்குத்தில் மருமகன் உயிரிழப்புதெரணியகலையில் சம்பவம்

தெரணியகலையில் மாமனாரின் கத்திக்குத்தில் மருமகன் உயிரிழப்பு

தெரணியகலை, மாலிபோடவத்தை தேயிலை தொழிற்சாலை பகுதியில் மாமனார் கத்திக்குத்தியதில் மருமகன் உயிரிழந்துள்ளார்.

நேற்று (20) மாலை இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியதில், மாமனார் கூர்மையான ஆயுதத்தால் மருமகனைத் தாக்கியுள்ளார்.

தாக்குதலில் பலத்த காயமடைந்த மருமகனை பிரதேசவாசிகள் இணைந்து தெரணியகலை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் 33 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை ஆவார்.

இவரது மனைவி தற்போது தொழில் நிமித்தம் வெளிநாடு சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )