
இறக்குமதி செய்யப்படும் சோளத்திற்கான பண்ட வரி உயர்வு
இறக்குமதி செய்யப்படும் சோளத்திற்கு விதிக்கப்பட்டுள்ள விசேட பண்ட வரியை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் அதிகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
நிதி அமைச்சு வெளியிட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின்படி, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் சோளத்திற்கான வரி 50 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த திருத்தப்பட்ட வரி விகிதம் 2026 மே 5 ஆம் திகதி முதல் 2026 டிசம்பர் 31 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனுடன், 2025 டிசம்பர் 31 ஆம் திகதி வெளியிடப்பட்ட 2469/12 இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் கீழ் இருந்த முந்தைய வரி விதிமுறைகளும் திருத்தப்பட்டுள்ளன.
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் 2026 மே 04 ஆம் திகதியிடப்பட்டு இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

