மே மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றமில்லை

மே மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றமில்லை

மே மாதத்திற்குரிய லிட்ரோ எரிவாயு விலையில் திருத்தம் மேற்கொள்ளப்போவதில்லை என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தீர்மானித்துள்ளது.

சர்வதேச சந்தையில் எரிவாயு விலை உயர்வு மற்றும் நாணய மாற்று விகிதங்களில் நிலவும் சவாலான சூழ்நிலைகளுக்கு மத்தியிலும், நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இந்த முறை விலையை அதிகரிக்காமல் இருக்க நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, 2026 மே மாதத்திற்கும் தற்போதுள்ள விலைகளே செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

12.5 கிலோகிராம் சிலிண்டர்: ரூ. 4,765

5 கிலோகிராம் சிலிண்டர்: ரூ. 1,910

2.3 கிலோகிராம் சிலிண்டர்: ரூ. 890

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )