அரகலய போராட்டத்தில் அரசியல்வாதிகளுக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டிற்கு எதிரான அடிப்படை உரிமை மனு தொடர்பில் கோட்டபேவிற்கு மீண்டும் நீதிமன்றம் அறிவிப்பு

அரகலய போராட்டத்தில் அரசியல்வாதிகளுக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டிற்கு எதிரான அடிப்படை உரிமை மனு தொடர்பில் கோட்டபேவிற்கு மீண்டும் நீதிமன்றம் அறிவிப்பு

அரகலய போராட்டத்தின் போது சேதமடைந்த அரசியல்வாதிகளின் வீடுகளுக்கு நஷ்டஈடு வழங்கியமைக்கு எதிரான அடிப்படை உரிமை மனு தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு மீண்டும் அறிவித்தல்அனுப்புமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2022 மே 9ஆம் திகதி அரகலய போராட்டக்களத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து, நாடு முழுவதும் ஏற்பட்ட வன்முறைகளின் போது முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன மற்றும் சேதமடைந்தன.

இவ்வாறு பாதிக்கப்பட்ட அரசியல்வாதிகளுக்கு வழங்கப்பட்ட நஷ்டஈட்டுத் தொகை சட்டவிரோதமானது என அறிவிக்கக் கோரியே இந்த அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சட்டவிரோதமான முறையில் அரசியல்வாதிகளுக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படும் குறித்த நிதியை மீண்டும் அரசாங்கத்திடம் அறவிடுமாறு இந்த மனுவின் ஊடாகக் கோரப்பட்டுள்ளது.

இன்று (08) இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, இந்த வழக்கில் பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு மீண்டும் ஒருமுறை புதிய அறிவித்தலை அனுப்புமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )