
4 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய ஹசீஸ் போதைப்பொருளுடன் இலங்கையர் கட்டுநாயக்கவில் கைது
இன்று (10) அதிகாலை 12:30 அளவில் தாய்லாந்தின் பெங்காக் நகரில் இருந்து தாய் ஏர்வேஸ் விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை சந்தேகநபர் வந்தடைந்தார்.
சந்தேக நபர் கொண்டு வந்த பயணப் பொதியில் சாக்லேட் என பொதியிடப்பட்ட 15 பாக்கெட்டுகளில் இந்த போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது.
மொத்தம் 4 கிலோ 778 கிராம் ஹசீஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
இந்த போதைப்பொருள் தொகையின் சந்தைப் பெறுமதி சுமார் 4 கோடியே 77 லட்சத்து 80 ஆயிரம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர், இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். அவரைத் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கான உத்தரவைப் பெற்று மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க பொலிஸார் திட்டமிட்டுள்ளனர்.

