தமிழ்நாட்டில் 717 மதுபான விற்பனை நிலையங்களை மூட உத்தரவு

தமிழ்நாட்டில் 717 மதுபான விற்பனை நிலையங்களை மூட உத்தரவு

தமிழ்நாடு முழுவதும் இயங்கி வரும் 717 மதுபான விற்பனை நிலையங்களை மூடுமாறு முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ்நாட்டில் தற்போது 4,829 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன.

மதுப் பழக்கத்தால் குடும்பங்கள் பாதிக்கப்படுவதாகவும், சமூக சீர்கேடுகள் அதிகரித்து வருவதாகவும் பல்வேறு தரப்பினரிடம் நீண்டகாலமாக பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, விஜய் தலைமையிலான அரசு பதவியேற்ற பின்னர், போதைப்பொருள் பரவலைக் கட்டுப்படுத்தவும் இளைஞர்களைப் பாதுகாக்கவும் 65 சிறப்புப் படைகள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக, மாநிலம் முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள், வழிபாட்டு தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்களிலிருந்து 500 மீற்றர் எல்லைக்குள் அமைந்துள்ள 717 மதுபான விற்பனை நிலையங்கள் இரண்டு வாரங்களுக்குள் மூடுமாறு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை, தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை முறைப்படுத்தும் அரசின் முக்கிய கட்டமாகக் கருதப்படுவதுடன், சமூக ஆரோக்கியத்தையும் இளைஞர்களின் பாதுகாப்பையும் முன்னிறுத்தி தீர்மானமாகவும் பார்க்கப்படுகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )