கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் ‘கம்பஹா ஒஸ்மண்ட்’ கைது

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் ‘கம்பஹா ஒஸ்மண்ட்’ கைது

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான சஞ்சீவ குமார சமரரத்ன என்ற கணேமுல்ல சஞ்சீவ கொலைக்கு உடந்தையாக இருந்ததற்காகவும், அதற்காக துப்பாக்கிகளை வழங்கியதற்காகவும் ஒஸ்மண்ட் குணசேகர என்ற கம்பஹா ஒஸ்மண்ட் கொழும்பு மாவட்ட குற்றப் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிப்ரவரி 19, 2025 அன்று, கொழும்பு நீதவான் நீதிமன்ற எண். 05இல், சிறைச்சாலையால் ஆஜர்படுத்தப்பட்ட கணேமுல்ல சஞ்சீவவை, வழக்கறிஞர் போல் வேடமிட்ட நபர் ஒருவர் சுட்டுக் கொன்றார்.

இது தொடர்பாக, தற்போது விளக்கமறியலில் உள்ள சந்தேக நபர்களிடமிருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில், சந்தேக நபர் நேற்று இரவு (13) கம்பஹா, ஸ்ரீ போதியில் கைது செய்யப்பட்டார்.

வெளிநாட்டில் வசிக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுடன் கூட்டு சேர்ந்து இந்தக் கொலைத் திட்டம் தீட்டப்பட்டதும், குற்றத்தைச் செய்வதற்குத் தேவையான துப்பாக்கிகளை வழங்கி சந்தேக நபர் கொலைக்கு உடந்தையாக இருந்ததும் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் கைது செய்யப்பட்டபோது, ​​அவரிடமிருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட தொடர் சுடும் ரகத் துப்பாக்கி, 10 தோட்டாக்கள் மற்றும் 2 மகஸின்கள் கண்டெடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர், கம்பஹாவைச் சேர்ந்த 69 வயதுடையவர் ஆவார்.

இந்தக் கொலை தொடர்பாக கொழும்பு மாவட்டக் குற்றப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )