
வத்தளை, ஜா-எல கம்பஹா உட்பட பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
கம்பஹா, மினுவாங்கொடை, ஜா-எல ,வத்தளை, திவுலபிட்டிய, மீரிகம, அத்தனகல்ல, மஹர, மற்றும் கந்தான ஆகிய தாழ்நிலப் பகுதிகளில் வசிப்போர் வௌ்ள அபாயம் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்தனகலு ஓயா வடிநிலப் பகுதிகளில் கடந்த சில மணித்தியாலங்களில் பெய்த கணிசமான மழைவீழ்ச்சி மற்றும் நீர்மட்ட அவதானிப்புகளின் அடிப்படையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்தனகலு ஓயா மற்றும் ஊறுவல் ஓயா பள்ளத்தாக்குகளின் தாழ்நிலப் பகுதிகளில் சில இடங்களில் சிறியளவிலான வௌ்ள நிலை ஏற்படும் அபாயம் இருப்பதாக நீர்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

