
சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 830 கிலோ பீடி இலைகள் கடற்படையால் கைப்பற்றப்பட்டது
மன்னார் வடக்குக் கடல் மற்றும் நடுகுடா கடலோரப் பகுதிகளில் 2026 மே 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் இலங்கை கடற்படையினரால் நடத்தப்பட்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கைகளின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் இறக்குமதி செய்யப்பட்ட 830 கிலோகிராம் பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
வட மத்திய கடற்படை கட்டளையின் கீழ் செயல்பட்ட தம்மென்னா மற்றும் கஜபா எனும் இலங்கை கடற்படை கப்பல்களின் குழுக்கள் இணைந்து முன்னெடுத்த இந்த இரு நாள் விரிவான கடல் சோதனையின் போது, சந்தேகத்திற்கிடமான 12 கப்பல்கள் பரிசோதிக்கப்பட்டதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விசேட நடவடிக்கையின்போது, கடத்தல்காரர்கள் சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவர முயற்சித்தபோதே கைவிடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 831 கிலோ பீடி இலை மூட்டைகள் கடற்படையினரால் மீட்டெடுக்கப்பட்டன.
கைப்பற்றப்பட்ட பீடி இலைகள், மேலதிக விசாரணைகள் மற்றும் சட்ட நடைமுறைகள் நிறைவேற்றப்படும் வரை கடற்படையின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

