
போர் முடிவடையாமலிருந்திருந்தால் ஜனாதிபதி அனுர பிரபாகரனின் அனுமதியுடன் தான் யாழ்ப்பாணதில் ஜோகிங் ஓட நேர்ந்திருக்கும் – நாமல் ராஜபக்ஷ
போர் வீரர்கள் போரை முடிவுக்குக் கொண்டுவராமலிருந்திருந்தால் ஜனாதிபதியால் யாழ்ப்பாணத்தில் ஜோகிங் ஓட முடியாது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
போர் முடிவடையாவிட்டால், ஜனாதிபதி பிரபாகரனின் அனுமதியுடன் ஜோகிங ஓட வேண்டியிருந்திருக்கும் என நாமல் ராஜபக்ச கூறினார்.
அவிசவெல்ல போர் வீரர்கள் கிராமத்தில் நடைபெற்ற போர் வீரர் நினைவு விழாவில் பங்கேற்றபோது நாமல் ராஜபக்ச இவ்வாறு கூறினார்.
“போர் முடிந்துவிட்ட போதிலும், அதை முடிவுக்குக் கொண்டுவர போரை வழிநடத்தியவர்களுக்கு எதிரான பழிவாங்கல் இன்னும் முடிவடையவில்லை. அதுவே வருந்தத்தக்க உண்மை. இன்று நீங்களும் நானும் சுதந்திரத்தைக் கொண்டாடுவதற்குப் பங்களித்த ஆயிரக்கணக்கான போர் வீரர்கள் இன்னும் ஊனமுற்ற நிலையில் வாழ்ந்து வருகின்றனர். மேலும், அதை வழிநடத்திய அதிகாரிகள் இன்னும் சிறையில் உள்ளனர். புலனாய்வு அதிகாரிகள் சிறையில் உள்ளனர். விடுதலைப் புலிகளின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்காக அரசாங்கம் தலையிடுகிறது,” என்று நாமல் ராஜபக்ச கூறினார்.

