
திறைசேரி நிரம்பி வழிகிறது என்றால் எரிபொருள் மற்றும் மின்சார கட்டணத்தை குறைத்து, 12 இலட்சம் விட்ஸ ரக கார் கனவை நனவாக்குங்கள்
பல்வேறு சந்தர்ப்பங்களில் ஜனாதிபதியும், ஆளும் தரப்பு அமைச்சர்களும் முதன்மை உபரி காணப்படுவதாகவும், அரச வருவாய் அதிகரித்து, திறைசேரி நிரம்பி வழிகின்றது என்றும் தெரிவித்தனர்.
மேலும் விரிவான கடன் வசதிகளின் கீழ் உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து பெரும் தொகை கிடைக்கவுள்ளதாகவும் அரசாங்க தரப்பிலிருந்து தெரிய வருவதாகவும் குறிப்பிட்ட எதிர்க்கட்சித் தலைவர், இத்தகைய சூழலில் மீண்டும் எரிபொருள் விலையை அதிகரிக்க நேரிடும் என ஜனாதிபதி குறிப்பிடுகிறார் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
திறைசேரி நிரம்பி வழியும் தருணத்தில், அந்த நிதியைப் பயன்படுத்தி எரிபொருள் விலை அதிகரிப்பைத் தடுத்து, மக்களுக்கு நிவாரணம் பெற்றுக் கொடுப்பதற்கும், எரிபொருள் மற்றும் மின்சாரக் கட்டணங்களைக் குறைப்பதற்கும் ஏன் பயன்படுத்தப்படவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (19) பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.
12 இலட்சத்துக்கு விட்ஸ் ரக கார் எப்போது கிடைக்கும்?
12 இலட்சத்துக்கு விட்ஸ் ரக கார் ஒன்றை கொள்வனவு செய்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தருவோம் என்று தேர்தல் காலங்களில் இந்த ஆளும் தரப்பினர் தெரிவித்தனர். இத்தகைய சூழலில், மக்கள் வாகனமொன்றை வாங்கும் கனவை நனவாக்குவது எப்போது என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு கேள்வி அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பினார்.
வாழ்க்கைச் செலவுக்கு மாதமொன்றுக்கு ரூ.16,690 போதுமானதா ?
ஒரு நபரால் மாதமொன்றுக்கு ரூ. 16,690 வைக் கொண்டு வாழலாம் என அரசாங்கம் தெரிவிக்கின்றது. அந்த தொகையில் எவ்வாறு ஒருவர் மாதமொன்றுக்கு வாழ முடியும் என்ற கேள்வி இங்கு எழுகின்றது.
தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் இந்த வறுமை கோட்டைக் கணக்கிடுவதில் முழுமையாக தவறிழைத்துள்ளது. இந்தத் தரவுகளையும், தகவல்களையும் பகுப்பாய்வு செய்யும்போதும் வரையறுக்கும்போதும் சரியான முறையில் அதனை மேற்கொள்ளுங்கள்.
தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தை அழைத்து இது தொடர்பில் விசாரிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு மேலும் தெரிவித்தார்.

