இந்த ஆண்டில் இதுவரை 128 காட்டு யானைகள் உயிரிழப்பு

இந்த ஆண்டில் இதுவரை 128 காட்டு யானைகள் உயிரிழப்பு

இந்த வருடத்தின் ஆரம்பம் முதல் மே 15 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் நாடு முழுவதும் 128 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

திணைக்களத்தின் தகவலின்படி, கடந்த ஜனவரி 1 ஆம் திகதி முதல் பதிவான யானை மரணங்களில் பெரும்பாலானவை மனிதச் செயல்பாடுகள் மற்றும் விபத்துகளால் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவற்றில், துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் 20 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதுடன், மின்சாரம் தாக்கியதில் 15 யானைகளும், ஹக்க பட்டாஸ் உட்கொண்டதில் 10 யானைகளும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விவசாயக் கிணறுகளுக்குள் விழுந்ததில் 5 யானைகள் உயிரிழந்துள்ளன. இதற்கு மேலாக, விஷம் உட்கொண்டமை, ரயில்களில் மோதியமை மற்றும் நீரில் மூழ்கியமை போன்ற காரணங்களாலும் பல யானைகள் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, காட்டு யானைகளின் தாக்குதல்களால் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 35 மனித உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

மனிதர் – யானை மோதல்களை குறைக்கும் நோக்கில் நீடித்த தீர்வுகள் அவசியம் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )