போதைப்பொருட்களுடன் இளைஞர் ஒருவர் கைது

போதைப்பொருட்களுடன் இளைஞர் ஒருவர் கைது

போதைப்பொருட்களை வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படும் இளைஞன் ஒருவரை இலங்கை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், அனுராதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாத்தளை சந்தி பகுதியில் திங்கட்கிழமை(06) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

அவரிடமிருந்து ஹெரோயின் 100 கிராம் 130 மில்லிகிராம் மற்றும் ‘ஐஸ்’ போதைப்பொருள் 100 கிராம் அடங்கிய பார்சல்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர் 26 வயதுடையவர் என்றும், அனுராதபுரம் மாத்தளை சந்தி பகுதியைச் சேர்ந்தவர் என்றும் ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )