காட்டு யானையை காப்பாற்ற முற்பட்ட பஸ் வீதியை விட்டு விலகி விபத்து

காட்டு யானையை காப்பாற்ற முற்பட்ட பஸ் வீதியை விட்டு விலகி விபத்து

கொழும்பிலிருந்து தெஹியத்தகண்டியவிற்குச் சென்ற இலங்கை போக்குவரத்து சபை பஸ் ஒன்று திம்புலாகல பகுதியில் வீதியை விட்டு விபத்துக்குள்ளானது.

நேற்று (14) இரவு 11.30அளவில் இந்த விபத்து ஏற்பட்டதாக மனம்பிடிய பொலிஸார் தெரிவித்துள்ளது.

வீதியை கடக்க முயன்ற காட்டு யானையை காப்பாற்ற முற்பட்டபோது இந்த விபத்து ஏற்பட்டதாக குறித்த பஸ் ஓட்டுநர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

விபத்து ஏற்பட்டபோது ஓட்டுநரும் நடத்துனரும் மட்டுமே பஸ்ஸில் இருந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து மனம்பிடியபொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )