100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த ஆட்டோ ; 4 பேர் படுகாயம்

100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த ஆட்டோ ; 4 பேர் படுகாயம்

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊவாக்கலை பகுதியில் ஆட்டோவொன்று நேற்று (29) வீதியை விட்டு விலகி 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்விபத்தில் ஆட்டோவில் பயணித்த நால்வரும் மிகவும் பலத்த காயங்களுக்குட்பட்ட நிலையில் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பில் லிந்துலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )