
நிலக்கரி முறைகேடுகள் குறித்த விசாரணைகளை 6 மாதங்களுக்குள் நிறைவு செய்யுமாறு ஜனாதிபதி உத்தரவு
நிலக்கரி இறக்குமதி மற்றும் மின்சார உற்பத்தியின் போது முறைகேடுகள் அல்லது சட்டவிரோதச் செயல்கள் இடம்பெற்றுள்ளனவா என்பதை ஆராய்வதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்ட விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு ஜனாதிபதி புதிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
அதன்படி, இது தொடர்பான விசாரணை நடவடிக்கைகளை 6 மாதங்களுக்குள் நிறைவு செய்து, அதன் அறிக்கையைத் தன்னிடம் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி அந்த ஆணைக்குழுவிற்கு உத்தரவிட்டுள்ளார்.
நிலக்கரி விநியோகம் மற்றும் அது தொடர்பான நிதி கொடுக்கல் வாங்கல்களில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த விசேட விசாரணை முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

