MY TVK செயலியை அறிமுகப்படுத்தினார் விஜய்

MY TVK செயலியை அறிமுகப்படுத்தினார் விஜய்

த.வெ.க. கட்சிக்கு புதிய உறுப்பினர் சேர்க்கை பணியை விரைவுப்படுத்த மை டிவிகே (MY TVK) என பெயரிடப்பட்ட உறுப்பினர் சேர்க்கைக்கான செயலியை தவெக தலைவர் விஜய் அறிமுகப்படுத்தி வைத்தார்.

செயலியை தொடங்கி வைத்தப்பின் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 தலைமுறையினருக்கு உறுப்பினர் அடையாள அட்டையை விஜய் வழங்கினார்.

குடும்பம் குடும்பமாக பொதுமக்களை தவெகவின் உறுப்பினர்களாக இணைப்பதற்காகவும் தமிழக வெற்றிக் கழகத்தின் அனைத்து உறுப்பினர்களையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வந்து சேர்க்கும் நோக்கிலும் இந்த செயலி அறிமுகப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )