
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய அணி
‘வோர்ன் – முரளி’ டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்க அவுஸ்திரேலிய அணி நேற்று (24) இரவு நாட்டை வந்தடைந்தது.
இதன் முதல் போட்டி எதிர்வரும் 29 ஆம் திகதி ஆரம்பமாவுள்ளது.
இந்த டெஸ்ட் தொடருக்கு மேலதிகமாக, அவுஸ்திரேலியா அணி இலங்கைக்கு எதிராக இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் விளையாட உள்ளனர்.
குறித்த போட்டிகள் பெப்ரவரி 12 மற்றும் 14 ஆகிய திகதிகளில் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற உள்ளது.



CATEGORIES Sports News

