
கரடியனாறு, அம்பவத்தை பிரதேசங்களில் இரு குண்டுகள் மீட்பு!
மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள ஈரலக்குளம் முற்றும் அம்பவத்தை பிரதேசத்தில் கைவிடப்பட்டிருந்து கைகுண்டு ஒன்றும், ஆர்.பி.ஜி ரக குண்டு ஒன்று உட்பட இரு குண்டுகளை நேற்று (12) மீட்டுள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த இரு பிரதேசங்களின் காட்டையண்டிய பகுதியில் கைவிடப்பட்டிருந்த இரு குண்டுகள் இருப்பதைகண்டு பொதுமக்கள் வழங்கிய தகவலையடுத்து பொலிஸார் இரு குண்டுகளையும் மீட்டுள்ளனர்.
இவ்வாறு மீட்டகப்பட்ட குண்டுகளை நீதிமன்ற அனுமதியை பெற்று செயலிழக்க செய்யும் நடவடிக்கையினை முன்னெடுத்து வருகின்றனர்.