
உள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது
சட்டவிரோதமான முறையில் உள்நாட்டில் தயாரித்த துப்பாக்கி ஒன்றினை பயன்படுத்தி குற்றச்செயல்களில் ஈடுபட்டுவந்த சந்தேக நபர் ஒருவரை மின்னேரிய பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரு கிடைத்த இரகசிய தகவலொன்றுக்கமைய நேற்று (25) பகல் மின்னேரிய பொலிஸ் பிரிவின் நிகவெவ பகுதியில் நடத்திய சுற்றிவளைப்பின்போதே குறித்த சந்தேக நபரை கைதுசெய்துள்ளதுடன் வீட்டின் அறையொன்றில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கி ஒன்றினையும் மின்னேரிய பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
மின்னேரிய நிகவெவ பகுதியை வசிப்பிடமாக கொண்ட 41 வயதுடையவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மின்னேரிய பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.