கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் வதிவிட பிரதிநிதி ஆகியோருக்கு இடையே சந்திப்பு

கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் வதிவிட பிரதிநிதி ஆகியோருக்கு இடையே சந்திப்பு

கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர். ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் வதிவிட பிரதிநிதி அசுசா குபோடா ஆகியோருக்கு இடையே நேற்று (04) திருகோணமலை ஆளுநர் அலுவலகத்தில் கலந்துரையாடல் நடைபெற்றது.

கிழக்கு மாகாணத்தில் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தினால் (UNDP) மேற்கொள்ளப்படும் திட்டங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

தொடர்ந்து நடைபெற்று வரும் வீட்டுவசதி, வாழ்வாதார அபிவிருத்தி மற்றும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான திட்டங்களை நிறுவுதல் குறித்து மேலும் கலந்துரையாடல்கள் நடைபெற்றது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )