மும்பை – சென்னை அணிகள் இன்று பலப்பரீட்சை

மும்பை – சென்னை அணிகள் இன்று பலப்பரீட்சை

10 அணிகள் பங்கேற்றுள்ள 19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தி யாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் மும்பை வான் கடே ஸ்டேடியத்தில் இன்று (23) நடைபெறும் 33-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியன்களான மும்பை இந்தியன்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் கோதாவில் குதிக்கின்றன.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

மும்பை: குயின்டான் டி காக், ரோகித் சர்மா அல்லது தனிஷ் மலிவார், நமன் திர், சூர்யகுமார், திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்), ரூதர்போர்டு அல்லது வில் ஜாக்ஸ், மிட்செல் சான்ட்னெர், கிரிஷ் பகத், ஜஸ்பிரித் பும்ரா, கசன்பார், அஸ்வனி குமார்.

சென்னை: சஞ்சு சாம்சன், ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), உர்வில் பட் டேல், மேத்யூ ஷார்ட் அல்லது டோனி, சர்ப்ராஸ் கான், டிவால்ட் பிரே விஸ், ஷிவம் துபே, ஜாமி ஓவர்டான், அன்ஷூல் கம்போஜ், நூர் அகமது, முகேஷ் சவுத்ரி அல்லது மேட் ஹென்றி, குர்ஜப்னீத் சிங்.

இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )