
இதய நோயாளர்களுக்கான ஊசி மருந்துக்கு அமைச்சரவை அனுமதி
இதயநோய் நிலைமை கொண்டுள்ள நோயாளிகளின் மரணத்தைத் தடுப்பதற்காக வழங்கப்படுகின்ற ஊசி மருந்தான டெனெக்ரிப்லெஸ் 40 மில்லிகிராம் ஊசி மருந்தை கொள்வனவு செய்வதற்காக இலங்கையைச் சேர்ந்த நிறுவனமொன்றுக்கு குறித்த ஒப்பந்ததை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இன்று (18) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ இதனை தெரிவித்தார்.

CATEGORIES Sri Lanka