
மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று
2025 ஆம் ஆண்டுக்கான பாதீடு மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெறவுள்ளது.
நிதியமைச்சராக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கடந்த பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதி நாடாளுமன்றில் பாதீட்டை முன்வைத்தார்.
இதனையடுத்து, கடந்த பெப்ரவரி மாதம் 25 ஆம் திகதி பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நடைபெற்றது.
இதன்போது, இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 109 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
ஆதரவாக 155 வாக்குகளும் எதிராக 46 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.