
யாழ் மாவட்டத்தில் 22 கட்சிகள் மற்றும் 13 சுயேட்சைகுழுக்களின் வேட்புமனுக்கள் நிராகரிப்பு
எதிர்வரும் உள்ளூராட்சிமன்ற தேர்தலில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டிருந்த 136 கட்சிகள் மற்றும் 28 சுயேட்சை குழுக்களின் நியமன பத்திரங்களில் 22 கட்சிகள் மற்றும் 13 சுயேட்சைகுழுக்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அந்த வகையில் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் தமிழ் மக்கள் கூட்டணி ,ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி , ஈரோஸ் ஜனநாயக முன்னணி ஆகிய கட்சிகளுடைய வேட்புமனுக்கள் நிராகரிக்க பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு சுயேட்சையாக குழுக்களாகிய ஞானபிரகாசம் சுலக்ஷன் மற்றும் கௌசல்யா நரேந்திரன் ஆகியோருடைய வேட்புமனுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .