விமான எதிர்ப்பு ஏவுகணையை சோதனை செய்த வட கொரியா

விமான எதிர்ப்பு ஏவுகணையை சோதனை செய்த வட கொரியா

விமானங்களை எதிர்க்கும் ஏவுகணைகளை வெற்றிகரமாக சோதனை செய்ததாக வட கொரியா அறிவித்துள்ளது. அமெரிக்கா மற்று்ம தென் கொரியா இணைந்து மேற்கொள்ளும் இராணுவ பயிற்சிகளை தொடர்ந்து வட கொரியா இந்த ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது.

ஏவுகணை சோதனையை வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் நேரில் மேற்பார்வையிட்டதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. புதிய ஏவுகணை சோதனை அந்நாட்டு பாதுகாப்பில் மிக முக்கிய பங்கு வகிக்கும் என்றும் கூறப்படுகிறது.

அமெரிக்கா மற்றும் தென் கொரியா இணைந்து மேற்கொண்ட இராணுவ பயிற்சி முகாமின் இறுதநாளில் வட கொரியா ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது.

அமெரிக்கா மற்றும் தென் கொரியா இணைந்து 11 நாட்கள் வரை கூட்டு இராணுவ பயிற்சியில் ஈடுபட்டன. இது அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்ற பிறகு நடந்த முதல் கூட்டு இராணுவ பயிற்சி என்பது குறிப்பிடத்தக்கது.

கூட்டு இராணுவ பயிற்சி குறித்து பேசிய வட கொரிய செய்தி தொடர்பாளர் ஒருவர், அமெரிக்கா மற்றும் தென் கொரியா மீண்டும் இத்தகைய ஆத்திரமூட்டும் செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS Wordpress (0) Disqus ( )