
போதைப் பொருளுடன் ஒருவர் கைது
கொழும்பில் இருந்து காத்தான்குடிக்கு வியாபார நோக்கத்துடன் 10 கிராம் ஐஸ் போதைப் பொருளை எடுத்து வந்த காத்தான்குடியைச் சேர்ந்த போதைப் பொருள் வியாபாரி ஒருவரை நேற்று (31) இரவு பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவித்தனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலொன்றை அடுத்து, கொழும்பில் இருந்து 10 கிராம் 33 மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருளை எடுத்து வந்த குறித்த வியாபாரியை நேற்று இரவு காத்தான்குடி பிரதேசத்தில் வைத்து மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
CATEGORIES Sri Lanka