போலி விசாக்களுடன் பங்களாதேஷ் பிரஜைகள் கைது

போலி விசாக்களுடன் பங்களாதேஷ் பிரஜைகள் கைது

போலி குடியுரிமை விசாக்களுடன் கிரேக்கத்திற்குச் செல்ல முயன்ற பங்காளதேஷ் பிரஜைகள் மூவர் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் (30) மாலை புறப்படவிருந்த விமானத்தில் பஹ்ரைனுக்கு செல்ல முயன்றபோது குறித்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 22, 23 மற்றும் 25 வயதுடைய பெண்களாவர்.

கிரேக்க குடியுரிமை விசாக்கள் குறித்து சந்தேகமடைந்த அதிகாரிகள் மேலும் விசாரணைகளுக்காக குடிவரவுத் துறை எல்லை கண்காணிப்பு பிரிவிடம் ஒப்படைத்தனர்.

தொழில்நுட்ப பரிசோதனையில் கிரேக்க விசாக்கள் உயர் தொழில்நுட்ப முறைகளைப் பயன்படுத்தி போலியாக தயாரிக்கப்பட்டமை தெரியவந்ததையடுத்து சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக விமான நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS Wordpress (0) Disqus (0 Comments)