தலவாக்கலை நீர்த்தேக்கத்திலிருந்து யுவதி ஒருவரின் சடலம் மீட்பு

தலவாக்கலை நீர்த்தேக்கத்திலிருந்து யுவதி ஒருவரின் சடலம் மீட்பு

தலவாக்கலை நீர்த்தேக்கத்தில் மிதந்த நிலையில் 22 வயது மதிக்கத்தக்க யுவதியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் சடலம் மிதப்பதை கண்ட பிரதேச மக்கள் தலவாக்கலை பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

அதனையடுத்து, பொலிஸார் சம்பவம் இடத்துக்கு சென்று சடலத்தை மீட்டுள்ளனர். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் டயகம பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளது. 

சடலமாக மீட்கப்பட்ட பெண் கடந்த ஞாயிற்றுக்கிழமை (30) காணாமல் போய் உள்ளதாக உறவினர்கள் டயகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டுச்செல்லபடவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பான விசாரணையை தலவாக்கலை பொலிஸார் முன்னெடுக்கின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS Wordpress (0) Disqus ( )