
உடனடியாக ஒரு சிறப்புக் தூதுக் குழுவை அமெரிக்காவுக்கு அனுப்புங்கள்
நமது நாட்டின் ஏற்றுமதியைப் பாதுகாக்க விசேட திட்டமொன்று தேவையாகும். வர்த்தகம் தொடர்பிலான விசேட பிரதிநிதி மற்றும் சர்வதேச வர்த்தகம் தொடர்பிலான விசேட நிபுணர்கள் குழுவை நியமித்தது அவர்களை உடனடியாக வாஷிங்டனுக்கு அனுப்புங்கள். அமெரிக்க ஜனாதிபதியோடு கலந்துரையாட வேண்டும். இது தொடர்பில் முன்னரும் பல தடவைகள் அரசாங்கத்திடம் எடுத்துரைத்த போதிலும், அரசாங்கம் அதனை பொருட்படுத்தவில்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
“தொலைதூரம் காண்போம்-அணி திரள்வோம் -எதிர்காலத்தை கட்டியெழுப்புவோம்” எனும் தொனிப்பொருளில் ஐக்கிய மக்கள் சக்தியின் வருடாந்த மாநாடு நேற்று (03) கொழும்பு ஹைட் பார்க் மைதானத்தில் மிகவும் வெற்றிகரமாக இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு மாநாட்டு உரையை நிகழ்த்தும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.