உங்கள் நிழல் இன்று மறைந்து விடும் :கொழும்பில் இன்று ஏற்படவுள்ள மாய நிகழ்வு

உங்கள் நிழல் இன்று மறைந்து விடும் :கொழும்பில் இன்று ஏற்படவுள்ள மாய நிகழ்வு

கொழும்பில் இன்று பிற்பகல் வேளையில் மக்களின் நிழல்கள் மறைந்து விடும் என வானியலாளர் அனுர சி. பெரேரா தெரிவித்துள்ளார்.

கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வசிக்கும் மக்களின் நிழல்கள் இன்று மதியம் 12.12 மணிக்கு ஒரு கணம் மறைந்துவிடும் என்று வானியலாளர் அனுர சி. பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

சூரியன் ஒரே நேரத்தில் கொழும்பிற்கு மேலான வான்பரப்பில் உச்சம் கொடுப்பதால் இந்த நிகழ்வு ஏற்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, கொழும்பு மற்றும் அதன் சுற்றியுள்ள புறநகர் பகுதி மக்கள் இன்று முதல் அடுத்துவரும் 7 நாட்களில் பிற்பகலில் இதை மாய நிகழ்வை உணர முடியும் என்றும் வானியலாளர் அனுர சி. பெரேரா தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS Wordpress (0) Disqus ( )