
மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் பலி
கட்டிடம் கட்டுவதற்காக மண் மேட்டை வெட்டிக் கொண்டிருந்தபோது, மண்மேட்டின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்ததில், அங்கு வேலை செய்த மேசன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றொருவர் படுகாயமடைந்து இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பெல்மதுல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த மண் மேடு நேற்று (08) இரவு சரிந்து விழுந்த மண்மேட்டின் மணலில் சிக்கிய இருவரையும் மீட்க சுமார் 30 நிமிடங்கள் ஆனதாகக் தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் 45 வயதான ஒரு பிள்ளையின் தந்தை எனவும் இந்த நிலத்தின் உரிமையாளரே பலத்த காயங்களுடன் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
CATEGORIES Sri Lanka

