
தங்கத்தின் விலையில் மாற்றம்
உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இன்று (11) 3200 அமெரிக்க டொலர்களை (900,000 ரூபாய்க்கு மேல்) தாண்டியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கொழும்பு தங்கச் சந்தை இன்று (11) அறிவித்த தங்க விலை விபரங்களின்படி, 22 கெரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 235,500 ரூபாயாகும்.
மேலும், 24 கெரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 256,000 ரூபாயாக அதிகரித்துள்ளது.

