
மசகு எண்ணெயின் விலையில் மாற்றம்
சர்வதேசச் சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.
உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 2.21 டொலர்களால் அதிகரித்து 64.68 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 2.11 டொலர்களால் அதிகரித்து 67.96 அமெரிக்க டொலராக உயர்வடைந்துள்ளது.

