ஈக்குவடோரில் சக்திவாய்ந்த நில அதிர்வு

ஈக்குவடோரில் சக்திவாய்ந்த நில அதிர்வு

ஈக்குவடோரில் 6.3 மெக்னிடியூட் அளவில் சக்தி வாய்ந்த நில அதிர்வு ஒன்று பதிவாகியுள்ளது.

தென் அமெரிக்க நாடான ஈக்குவடோரின் பசிபிக் கடற்கரையில் இந்த சக்திவாய்ந்த நில அதிர்வு பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நில அதிர்வு காரணமாக சில கட்டடங்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எஸ்மரால்டாஸ் நகரத்திலிருந்து 20.9 கிலோமீற்றர் வடகிழக்கே, பசிபிக் பெருங்கடல் பகுதியில் இந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நில அதிர்வைத் தொடர்ந்து, பசிபிக் கடற்கரை பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

ஆனால் அந்த எச்சரிக்கை பின்னர் திரும்பப் பெறப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )