
வேகமாக பரவிவரும் சிக்குன்குனியா மற்றும் டெங்கு, பரவலை கட்டுப்படுத்த விசேட குழு
471 வீடுகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
நாட்டில் தற்போது பரவி வரும் டெங்கு மற்றும் சிக்குன்குனியா பரவலைக் கட்டுப்படுத்த விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளதாக மேல் மாகாண சபையின் சுகாதார அமைச்சின் செயலாளர் எல்.ஏ.கலுகபு ஆராச்சி தெரிவித்துள்ளார்.
டெங்கு நோயாளிகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் மேல் மாகாணத்திலிருந்தே பதிவாகியுள்ளதாக அவர் கூறுகிறார்.
இதேவேளை ,இந்த வருடத்தில் இதுவரை 17,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது.
இவற்றில் 1,800 பேர் கொழும்பு மாநகர சபைப் பகுதியில் பதிவாகியுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் தலைமை சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் கீத்திகா ரத்னவர்தன தெரிவித்தார்.
டெங்கு அபாயம் உள்ள 70,000 வீடுகள் ஆய்வு செய்யப்பட்டு,
471 வீடுகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியர் மேலும் குறிப்பிட்டுள்ளார் .

