
இந்திய பொலிஸாரால் தேடப்படும் சந்தேக நபர்களைத் தேடி கட்டுநாயக்கவிற்கு வந்த விமானத்தில் இன்று விசேட சோதனை!
சென்னையிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் விசேட சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.
காஷ்மீரில் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஒரு குழு, குறித்த விமானத்தில் வந்ததாக கிடைக்கப்பெற்ற தொலைபேசி அழைப்பின் அடிப்படையில் இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது .
இன்று காலை 11:59 அளவில் இந்தியாவின் சென்னை நகரத்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான UL 122 விமானத்திலேயே இந்த விசேட சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
எனினும் , விமானத்தில் சந்தேகத்திற்கிடமான நபர்கள் எவரும் நாட்டிற்குள் வந்ததாக எந்த தகவலும் இல்லை என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
CATEGORIES Sri Lanka

