அடையாள அட்டை இல்லாதவர்கள் இன்று வாக்களிக்க எந்தத் தடையும் இல்லை

அடையாள அட்டை இல்லாதவர்கள் இன்று வாக்களிக்க எந்தத் தடையும் இல்லை

இன்று நடைபெறுகின்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது , அடையாள அட்டை இல்லாதவர்கள் வாக்களிக்க எந்தத் தடையும் இல்லை என்று தேர்தல்கள் ஆணையர் ஜெனரல் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அடையாள அட்டை இல்லாதவர்கள், பாஸ்போர், ஓட்டுநர் உரிமம் , ஓய்வூதியம் பெறுபவராக இருந்தால் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட ஓய்வூதிய அடையாள அட்டை, வயது வந்தோருக்கான அடையாள அட்டை , மதகுருமார்களுக்கு மதம் சார்ந்து வழங்கபட்ட அடையாள அட்டை போன்றவற்றை பயன்படுத்தியும் வாக்களிக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார .

கடந்த நாட்களில் அடையாள அட்டைகள் மற்றும் பாஸ்போர்ட்டுகளை வழங்குவதில் தாமதம் ஏற்பட்ட போது
குறித்த நபர்களின் புகைப் படங்கள் இணைக்கப்பட்ட ஆவணம் ஒன்று வழங்கப்பட்டது .அந்த ஆவணமும் ஏற்றுக்கொள்ளப்படுமென தேர்தல்கள் ஆணையர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இவ்வாறான ஆவணங்கள் எதுவுமற்றவர்கள் தேர்தல் காலத்தில் வாக்களிப்பதற்கென தேர்தல்கள் அலுவலகதால் வழங்கப்பட்ட தற்காலிக அடையாள அட்டையை பயன்படுத்தியும் வாக்களிக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார .

சிங்கள ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )