
அரசியலமைப்பு பேரவையின் செயலாளர் தம்மிக்க தசநாயக்க இராஜினாமா
முன்னாள் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க, எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் அரசியலமைப்பு பேரவையின் செயலாளர் பதவியில் இருந்து விலகுவதாக அரசியலமைப்பு சபைக்கு அறிவித்துள்ளார்.
தனிப்பட்ட காரணங்களுக்காக தாம் விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
தம்மிக்க தசநாயக்கவின் இராஜினாமாவை அரசியலமைப்பு பேரவை ஏற்றுக்கொண்டதாக பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.
தம்மிக்க தசநாயக்க மே 25, 2023 அன்று பாராளுமன்றச் செயலாளர் நாயகம் பதவியிலிருந்து ஓய்வு பெற்றார்.பிறகு, அதே ஆண்டில் அப்போதைய அரசாங்கத்தினால் அரசியலமைப்பு பேரவையின் செயலாளர் பதவிக்கு நியமிக்கப்பட்டார்.
அந்த பதவிக்காக அவருக்கு சுமார் ஐந்து இலட்சம் ரூபாய் உதவித்தொகையும், வாகனம் உட்பட பல்வேறு வசதிகளும் அவருக்கு வழங்கப்பட்டன.
பாராளுமன்றத்தில் தனது கடமைகளைச் செய்வதற்காக தசநாயக்கவுக்கு சமீபத்தில் ஒரு அமைச்சர் அறையும் ஒதுக்கப்பட்டது.
இதேவேளை , வாகனங்களைப் பயன்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் தொடர்பாக சில முன்னாள் பாராளுமன்ற அதிகாரிகள் மீது சமீபத்தில் கடுமையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
நாட்டின் நல்லாட்சிக்காக நிறுவப்பட்ட அரசியலமைப்பு பேரவையில் சட்டமா அதிபர், பொலிஸ் மா அதிபர், நீதிபதிகள் மற்றும் உயர் பதவிகளில் உள்ள அதிகாரிகளின் நியமனங்கள் அங்கீகரிக்கப்படுகின்றன

