சினோபெக் நிறுவனமும் எரிபொருள் விலைகளை அதிகரித்தது  ; சூப்பர் டீசல் விலை 572 ரூபாய்

சினோபெக் நிறுவனமும் எரிபொருள் விலைகளை அதிகரித்தது ; சூப்பர் டீசல் விலை 572 ரூபாய்

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விலைகளை உயர்த்தியதைத் தொடர்ந்து, சினோபெக்மற்றும் லங்கா ஐ.ஓ.சி
ஆகிய நிறுவனங்களும் தமது விலைகளை அதிகரித்துள்ளன

சினோபெக் (Sinopec) புதிய விலைகள்:

ஒக்டேன் 95 பெட்ரோல், 122 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு அதன்
புதிய விலை ரூ. 487

சூப்பர் டீசல், 219 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலை
ரூ. 572.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் ,
நேற்று (மார்ச் 21) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில்
எரிபொருள் விலைகளை அறிவித்தது .

303 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட லங்கா வெள்ளை டீசல் 79ரூபாயினால் அதிகரிப்பட்டு 382ரூபாயாக விற்பனைசெய்யப்படுகிறது.

353 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 4 ஸ்டார் யூரோ 4 லங்கா டீசல்
90ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 443ரூபாயாக விற்பனைசெய்யப்படுகிறது.

195 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட மண்ணெணெய் 60ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 255ரூபாய்க்கு விற்பனைசெய்யப்படுகிறது.

365 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட,ஒக்டேன் 95ரக யூரோ 4 லங்கா பெற்றோல் 90 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 455 ரூபாயாக விற்பனைசெய்யப்படுகிறது.

317 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒக்டேன் 92ரக லங்கா பெற்றோல் 81 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 398 ரூபாயாக விற்பனைசெய்யப்படுகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )