
ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்
ஆப்கானிஸ்தானில் நேற்று நள்ளிரவு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
தேசிய நில அதிர்வு மையம் வெளியிட்ட தகவலின்படி, இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆக பதிவாகியுள்ளது.
மேலும், இந்த நிலநடுக்கம் நிலத்தின் 82 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாகவும், அதன் மையப்பகுதி 36.167 டிகிரி வடக்கு அட்சரேகை மற்றும் 70.850 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையில் அமைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் அல்லது பாதிப்புகள் தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
CATEGORIES World News

