அதிகரிக்கப்படவுள்ள பஸ் கட்டணங்கள் இன்று அறிவிப்பு

அதிகரிக்கப்படவுள்ள பஸ் கட்டணங்கள் இன்று அறிவிப்பு

பஸ் கட்டணத் திருத்தம் ஒன்றை இன்று (22) மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை போக்குவரத்து ஆணைக்குழு (NTC) தெரிவித்துள்ளது.

இதற்கான கட்டணக் கணிப்பீடுகள் தற்போது நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த காலங்களில் பலமுறை எரிபொருள் விலை உயர்த்தப்பட்ட போதிலும், பஸ் கட்டணங்களில் மாற்றம் செய்யப்படவில்லை.

குறைந்தபட்சம் 15 சதவீதமாவது பஸ் கட்டணங்களை அதிகரிக்க வேண்டும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் எதிர்பார்க்கிறது.

நேற்று (21) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இது சுமார் 31 சதவீத விலையேற்றம் என அந்தச் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

எதிர்பார்ப்பு: இந்தக் கட்டண அதிகரிப்பு இன்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்ட பின்னரே, வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தனியார் பஸ்கள் மீண்டும் சேவையில் ஈடுபடும் எனத் தெரிவைக்கப்படுகிறது

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )