ஈரானின் மின் உற்பத்தி நிலையங்களை தாக்கினால்வளைகுடாவின் அனைத்து அமெரிக்க எரிசக்தி உட்கட்டமைப்புகளும் அழிக்கப்படும்-ட்ரம்பிற்கு என ஈரான் பதில் எச்சரிக்கை

ஈரானின் மின் உற்பத்தி நிலையங்களை தாக்கினால்வளைகுடாவின் அனைத்து அமெரிக்க எரிசக்தி உட்கட்டமைப்புகளும் அழிக்கப்படும்-ட்ரம்பிற்கு என ஈரான் பதில் எச்சரிக்கை

48 மணி நேரத்திற்குள் ஹார்முஸ் நீரிணையைத் திறக்காவிட்டால் ஈரானின் அனைத்து மின் உற்பத்தி நிலையங்களும் தாக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கைக்கு ஈரான் தற்போது பதிலடி கொடுத்துள்ளது.

ஈரானிய அரசு ஊடகங்களை மேற்கோள் காட்டி BBC செய்திச் சேவை வெளியிட்டுள்ள தகவலின்படி, ஈரானின் இவ்வாறு பதிலளித்துள்ளது.,

தனது நாட்டின் மின் உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், வளைகுடா பிராந்தியம் முழுவதும் உள்ள அமெரிக்காவுடன் தொடர்புடைய அனைத்து எரிசக்தி உட்கட்டமைப்புகளையும் இலக்கு வைப்போம் என ஈரான் அரசு அறிவித்துள்ளது.

இந்த மோதலானது ஈரானுடன் மட்டும் நின்றுவிடாமல், மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்காவின் நலன்கள் மற்றும் எரிசக்தி நிலையங்கள் மீதும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என ஈரான் மறைமுகமாக எச்சரித்துள்ளது.

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான இந்த நேரடி அச்சுறுத்தல்கள் உலகளாவிய கச்சா எண்ணெய் சந்தையில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், ஒரு முழு அளவிலான போருக்கான அச்சத்தையும் தோற்றுவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )